தங்கதமிழ்செல்வனுக்குப் பதவி கொடுத்த ஸ்டாலின் புத்திசாலியா! இல்லையா?

தி.மு.க. வட்டாரத்தில் இப்போது ஹாட் டாக், தங்க தமிழ்செல்வனுக்கு கொடுக்கப்பட்ட பதவிதான்.


மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவுக்கு வர விரும்பும் அரசியல் புள்ளிகளுக்கு நம்பிக்கை ஊட்டவே தங்க தமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப் பட்டு இருக்கிறது.

ஆனால், இது சொந்தக் கட்சிக்காரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடும் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அதுவும் குறிப்பாக தங்க தமிழ்செல்வனுக்குப் பதவி கொடுக்கப்பட்டதை யாரும் ரசிக்கவில்லை.

ஏனென்றால் தங்க தமிழ்ச்செல்வன் ஒரு 'அடங்காபிடாரி'. தலைமைக்கு கீழ்பணியாமை, எடுத்தெறிந்து பேசுவது, எதிலும் குற்றம் காணும் மனநிலை, எளிய தொண்டர்களிடம் தான் ஒரு 'குறுநில மன்னன்' போல நடந்து கொள்வது,

ஒரு ரௌடியைப் போல பொது இடங்களிலும் பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்தும் அலட்சிய பேச்சு இவை எல்லாம் அவரை கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகிக்க தகுதி அற்றவர் ஆக்குகின்றன என்கிறார்கள்.

அதேநேரம் ஸ்டாலின் ஆதரவாளர்களோ வேறு ஒரு கருத்தை சொல்கிறார்கள். கொள்கை பரப்புச் செயலாளர்களாக ஆ.ராசா, திருச்சி சிவா இருக்கிறார்கள், அவர்களைத் தாண்டி தங்கதமிழ்செல்வனால் எதுவும் செய்ய முடியாது. அதனால் இதுஒரு அலங்காரப் பதவிதான் என்கிறார்கள்.

ஸ்டாலின் புத்திசாலியா இல்லையா என்பதை தங்கதமிழ்செல்வனின் செயல்பாடுகளில் இருந்துதான் அறிந்துகொள்ள முடியும். பார்க்கலாம்.