திமுக பொதுக்குழு இன்று முதன்முறையாக சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
திருநங்கையருக்கு ஸ்டாலின் அழைப்பு! உற்சாகத்தில் தி.மு.க. இளைஞர் அணி!
பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மு.க.ஸ்டாலினும் மற்ற தலைவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பொதுக்குழு கூட்டத்தில் பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மறைவுக்கும், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் திருநங்கையரை அதாவது மூன்றாம் பாலினத்தவரை கட்சியில் இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது, மிகவும் நல்ல முயற்சியாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. சமூக அங்கீகாரத்துக்குத்தான் திருநங்கையரும், திருநம்பியரும் ஏங்கி வருகிறார்கள். அவர்களை கட்சியில் சேர்த்து பொறுப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில், மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான பிரச்னைகள் தீர வழிவகை உண்டாகும்.
அதனால், ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பெருத்த வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக தி.மு.க. இளைஞர் அணியினர் கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.