ஸ்டாலின் வீட்டுத் திருமணம் நின்றுபோனது! கவலையில் செல்வி குடும்பம்!

பண மோசடியில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் சகோதரி செல்வியின் மருமகன் ஜோதிமணியின் லீலைகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பானது. ஒருவழியாக விவகாரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.


ஆனால், மேற்கொண்டு இதே மாதிரி விவகாரம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு பொது அறிவிப்பு வெளியானது. அதாவது, ’எங்கள் மருமகன் ஜோதிமணி அவர்களின் எந்தச் செயல்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று கருணாநிதியின் மகள் செல்வியும் அவருடைய கணவர் செல்வமும் சேர்ந்து அறிவிப்பு வெளியிட்டனர். 

அதன்பிறகு மீண்டும் ஒரு சோகம் அந்தக் குடும்பத்துக்கு நிகழ்ந்துள்ளது. ஆம், ஜோதிமணி - எழிலரசி தம்பதியரின் முதல் மகள் ஓவியாவின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் சென்னையில் புகழ்பெற்ற ஒரு நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. பிரபல தொழிலதிபர் அக்னி ஜெயப்பிரகாஷ் மகன்தான் மாப்பிள்ளை.  

இந்த நிச்சயதார்த்தம் முடிந்த சில நாள்களில் இப்படி ஒரு சிக்கலில் ஜோதிமணி மாட்டினார். அப்போதே இந்தத் திருமணம் தொடர்ந்து நடக்குமா என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது.

அதேபோன்று, இப்போது அந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏன் என்ற காரணம் எதுவும் சொல்லப்படாமல் ஸ்டாலின் குடும்பத் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது அந்தக் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.