"திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந் எம்பி ஆவது உறுதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்"
முதலமைச்சராகவே மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஸ்டாலின்! வேலூர் பிரச்சார காமெடி!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர் சட்டமன்றத்தில் அதிகமாக இடம் பெற்றது கலைஞர் தான் என்பது எப்படி பெருமையோ அது போல அடுத்து அதிகமாக சட்டமன்றத்தில் இடம் பெற்ற பெருமை அண்ணன் துரைமுருகனைத் தான் சேரும்
அவருடைய மகனுக்கு தான் நான் இப்போது வாக்காளிக்க கேட்டு வந்துள்ளேன் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் கதிர் ஆனந் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று இருக்க வேண்டும் ஆனால் திமுக மீது கலங்கம் ஏற்படுத்துவதர்காக ஒரு நாடகத்தை நடத்தினார்கள் அதுதான் ரெய்டு இதை தமிழக மக்கள் நம்பவில்லை அதனால் தான் திமுக 39 இடங்களுக்கு 37இடங்களில் வெற்றி பெற்றது.
நீங்கள் கதிர் ஆனந்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நமது அணியின் 38வது எம்பி ஆவது உறுதி உங்களுடைய பகுதியில் உள்ள நியூடவுன் மேம்பாலம் உடனடியாக கட்டி முடிக்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்கு சேகரித்தார் இக்கூட்டத்தில் திமுக நகர நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: கோபிநாத் வாணியம்பாடி