நம்பிக்கை இல்லா தீர்மானம்! விரட்டி விரட்டி கேட்ட செய்தியாளர்கள்! சிக்கித் தவித்த ஸ்டாலின்!

மாநிலத்தில் ஆட்சி அமைக்க வழியில்லை, மத்திய அரசுக்கோ தேவைக்கும் அதிகமான சீட் கிடைத்துவிட்டதால், தி.மு.க.வின் ஆதரவும் தேவையில்லை. ஆக, கனவில் அமைத்துவந்த மாநில மந்திரி சபையும், மத்திய மந்திரி சபையும் டமாலாகி விட்டது.


இந்த நிலையில்தான் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் என்னவாகும் என்று நிருபர்கள் கேட்டதற்கு, இன்னமும் சட்டமன்றம் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை, அதன்பிறகு பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

என்னாச்சு என்று விசாரித்தால், படு சோகமாக இருக்கிறாராம் ஸ்டாலின் யாரோ, சொன்னதை நம்பி சம்பந்தமே இல்லாமல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் அரசுக்கு ஆபத்து வராது, தேவை என்றால் வேறு ஒருவரை சபாநாயகராக போட்டுவிடுவார்கள்.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றால், இன்னமும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். ஆறு மாதங்கள் காத்திருந்தாலும் ராகுல் வரமாட்டார் என்று தெரிகிறது. அதனால், இனிமேல் எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்.

இவை எல்லாவற்றையும்விட, ஆட்சியைக் கலைப்பதற்கு 50க்கும் மேற்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். இன்னும் இரண்டு வருடங்கள் கழியட்டும் என்று சொல்கிறார்கள். ஆக, விவரம் இல்லாமல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து விட்டேனே என்று தன்னைத்தானே நொந்துகொள்கிறாராம் ஸ்டாலின் 

பாவமாத்தான் இருக்கு.