ஸ்டாலின் ஆசை மண்ணாப் போச்சு! சிதம்பரத்தையும் தெறிக்கவிட்ட உச்ச நீதிமன்றம்!

ஏகப்பட்ட நம்பிக்கையுடன் இன்று தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கும்பல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். தி.மு.க. சார்பில் அபிஷேக் சிங்வியும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் ஆஜராக முன்வந்தனர்.


இன்று காலை இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் பூஷன் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அமர்வுக்கு முன்பு வந்தது. தி.மு.க. சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

ஆனால், தமிழக அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, 2011 மக்கள் தொகை அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்படுகிறது என்றும் அரசியல் விரோதத்துடன் தி.மு.க. தேர்தலை நிறுத்த முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2011 -மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் -என்றும் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.

ஏற்கெனவே 4 மாதங்கள் என்று இருந்ததை 3 மாதங்களாகக் குறைத்துள்ளது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு. மேலும், சிதம்பரத்தின் வருகையினால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஸ்டாலின் ஆசையும், சிதம்பரத்தின் நம்பிக்கையும் வீணாகப் போனதுதான் மிச்சம்.

இதையடுத்து டெல்லியில் பேசிய தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘தி.மு.க. தலைகீழாக நின்று பார்த்தார். உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஸ்டாலின் ஆசை நிராசை ஆனது. ஸ்டாலினுக்கு மக்களை சந்திக்க திராணி இல்லை’’ என்று கூறியிருக்கிறார்.