மண்ணெண்ணெய் விலையையும் மோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.

மோடி அரசுக்கு வந்தால் பெட்ரோல் விலை பாதியாக குறைந்துவிடும் என்பதுதான் அவர்களது வாக்குறுதியாக இருந்தது. ஆனால், இப்போது நாளும் ஒரு விலையேற்றம்தான் பரிசாக கிடைத்துக்கொண்டு இருக்கிறது.


பெரும்பான்மை ஏழை - எளிய மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை, நியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1 முதல், ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தி, 15 ரூபாய் என்பதை, 16.50 ரூபாய்க்கு விற்கப் போகிறார்களாம். மண்ணெண்ணெயின் இந்த விலை உயர்வு கண்டனத்திற்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக, வாங்கும் சக்தியைப் பெருமளவுக்கு இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில், அ.தி.மு.க. அரசு, விலை உயர்வின் மூலம், மேலும் சுமையை ஏற்றுவது, சிறிதும் இரக்கமில்லாத - நியாயமில்லாத செயல்!

இந்த விலை உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு, பழைய விலையிலேயே நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெயை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.