ராஜன் செல்லப்பா கலகம்! பின்னணியில் ஸ்டாலின்? பரபரப்பு தகவல்!

அதிமுகவிற்கு எதிராக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்துவரும் கழகத்தின் பின்னணியில் மு க ஸ்டாலின் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.


திடீரென இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறினார். மக்களை ஈர்க்கும் தலைவராக எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இல்லை என்று பகிரங்கமாகக் கூறி அனைவரையும் அதிர வைத்தார். பொதுக்குழுவைக் கூட்டி பொதுச் செயலாளரை உடனடியாக தேர்வு செய்யவேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எம்எல்ஏக்கள் பலர் தன்னை ஆதரிப்பதாகவும் விரைவில் அவர்களும் இதே கோரிக்கையை பொதுக்குழுவில் முன் வைப்பார்கள் என்றும் ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். திடீரென ராஜன் செல்லப்பா ஒற்றை தலைமை குறித்து பேசுவதற்கான காரணம் என்ன என்று ஆராயப்பட்டது.

அதில் திமுக வழக்கில் சிக்கியுள்ள எம்எல்ஏக்களில் ராஜன் செல்லப்பா கும் ஒருவராக இருக்கலாம் என்று அதிமுகவினரே கிசுகிசுக்கின்றனர். தேர்தல் தோல்வியால் துவண்டு கிடக்கும் அதிமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி மேலும் சில எம்எல்ஏக்களை வளைக்க திமுக சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் அதற்கு ராஜன் செல்லப்பா ஆகி விட்டதாகவும் கூறுகிறார்கள். ஒற்றைத் தலைமை என்கிற வாதத்தை முன்வைத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே கலகத்தை ஏற்படுத்துவது தான் ராஜன் செல்லப்பா விட்டம் என்றும் இதைத்தான் திமுகவும் விரும்புகிறது என்றும் சொல்கிறார்கள்.

பொதுக்குழுவில் பிரச்சனை மீண்டும் ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு அணிகள் என அதிமுக பிளவுபட்டால் மேலும் சில எம்எல்ஏக்களை திமுக தன் பக்கம் இழுக்க முடியும் என்பதால் ராஜன் செல்லப்பா மூலமாக காய் நகர்த்த படுவதாகவும் அதிமுகவினரே கூறுகின்றனர். 

இதனால்தான் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடியும் சரி துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சும் சரி உடனடியாக கருத்துக்கூற மறுத்துவிட்டனர். இதற்கு காரணம் இவர்கள் இருவருக்கும் ஆதரவாகவும் ராஜன் செல்லப்பா பேசுவது போல் தெரிந்தாலும் அவர்கள் இருவருக்கும் எதிராகவே ராஜன் செல்லப்பா கருத்துக்களை முன்வைத்திருந்தார்.