முரசொலி விழாவுக்கு ராகுலை கை கழுவிய ஸ்டாலின்! மம்தாவுக்கு மட்டும் அழைப்பு!

தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் ராகுல் காந்தி, இதுவரை அந்த விஷயத்தில் பின்வாங்காமல் உறுதியாக இருக்கிறார்.


இந்த விவகாரம் ஸ்டாலின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஏனென்றால், அடுத்த பிரதமர் ராகுல் என்று இந்தியாவிலேயே உரக்கவும் சொன்னவர் ஸ்டாலின் மட்டும்தான். மற்ற அனைத்துத் தலைவர்களுக்கும் ராகுல் காந்தி ஜெயிக்க மாட்டார் என்று தெரிந்திருந்த காரணத்தால் கப்சிப் என்று இருந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்புக்கு வரவில்லை என்றால், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்.

இதனை உறுதிபடுத்தும் விதமாகத்தான்  உதயநிதி, கே.என்.நேரு ஆகியோர் காங்கிரஸ் கட்சியை மட்டம் தட்டி பேசி வருகிறார்கள். ஆனாலும், காங்கிரஸ் வேறு வழியின்றி அமைதி காத்துவருகிறது. இதனை கிட்டத்தட்ட முறிக்கும் மனநிலைக்கு ஸ்டாலின் வந்துவிட்டார் என்பதற்கு உதாரணமாகத்தான் முரசொலி விழாவை தி.மு.க.வினர் சொல்கிறார்கள்.

அதாவது கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 7ம் தேதி முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறப்புவிழா நடைபெற உள்ளது. வழக்கம் போல் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் திறந்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த விழாவுக்கு இருவரையுமே ஸ்டாலின் அழைக்கவில்லையாம். அதற்குப் பதிலாக மம்தா பானர்ஜிக்கு அழைப்பு கொடுத்துள்ளார்.  மம்தாவும் ஒப்புக்கொண்டுள்ளதால், இனிமேல் ஸ்டாலின் ரூட் தனியாத்தான் இருக்கும் என்கிறார்கள். பார்க்கலாம்.