கனிமொழியை மேடை ஏற்றாமல் ஒதுக்கிய ஸ்டாலின்! ஆனால் மம்தா பானர்ஜி செய்த தரமான சம்பவம்!

கனிமொழியை மேடை ஏற்றாமல் ஸ்டாலின் முன்வரிசையில் அமர வைத்த நிலையில் மம்தா பானர்ஜி சரியான செயல் மூலம் தரமான சம்பவத்தை அரங்கேற்றினார்.


சென்னையில் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதற்காக மேடைக்கு வந்த மம்தா பானர்ஜிக்கு அங்கிருந்த தலைவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஸ்டாலின், நாராயணசாமி, தயாநிதி மாறன், கி வீரமணி உள்ளிட்டோர் எல்லாம் மம்தாவிற்கு மரியாதை செய்தனர்.

ஆனால் கனிமொழிக்கு மேடையில் இடம் வழங்கப்படவில்லை. அவர் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தார். இதனை மேடை ஏறியதுமே மம்தா கவனித்துவிட்டார் போல, சால்வை அணிவித்து முடித்த உடன் தன்னுடைய உதவியாளரை மம்தா அழைத்தார்.

பிறகு அவரிடம் இருந்து ஒரு சால்வையை வாங்கிய மம்தா மேடைக்கு கீழே அமர்நிதருந்த கனிமொழியை அழைத்தார். எதற்கு என்று தெரியாமல் கனிமொழி பதற்றத்துடன் சென்ற நிலையில் தான் கைவியில் வைத்திருந்த சால்வையை கனிமொழியிடம் கொடுத்தார்.

இதனை எதிர்பார்க்காத கனிமொழி ஒரு நிமிடம் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். அண்ணன் ஸ்டாலின் தன்னை மேடையில் கூட ஏற்றாத நிலையில் மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ள மம்தாவிற்கு தன்னுடைய அருமை தெரிகிறது என்று நிச்சயம் கனிமொழி நினைத்திருப்பார்.

அதே சமயம் நாம் ஓரம் கட்டினாலும் கனிமொழிக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைத்துவிடுவதாக ஸ்டாலின் அந்த சம்பவத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்ததும் கண்கூடாக தெரிந்தது.