சோனியா மீட்டிங்கை புறக்கணித்த ஸ்டாலின்..! கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

இன்று டெல்லியில், அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் சோனியா காந்தி. இந்தக் கூட்டத்துக்கு வரமுடியாது என்று ஏற்கெனவே மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்த நிலையில், மாயாவதியும் வரமுடியாது என்று இன்று அறிவித்துவிட்டார்.


மற்ற அனைத்து கட்சிகளும் இந்தக் கூட்டத்துக்கு பங்கெடுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஸ்டாலின் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பு செய்திருக்கிறார். இந்த செய்தி அனைத்து கட்சியினரையும் அதிர வைத்துள்ளது.

சமீபத்தில் உள்ளாட்சி விவகாரம் குறித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை மூலம் தி.மு.க.வுக்கு டென்ஷனைக் கிளப்பியிருந்தார். அதன்பிறகு அவரே சமாதான அறிக்கை விட்டுவிட்டார் என்றாலும் தி.மு.க.வின் கோபம் தீரவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு டி.ஆர்.பாலுக்கு சொல்லப்பட்ட நிலையில், அவர் டெல்லிக்குப் போய்விட்டார். ஆனால், கடைசி வரை ஸ்டாலின் சிக்னல் கிடைக்காத காரணத்தால் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. திருமாவளவன் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே முக்கியப் பங்கு வகித்தனர்.

கூட்டணி முறிவுக்கு இதுவே அச்சாரம் என்கிறது தி.மு.க. தரப்பு. பார்க்கலாம்.