மாமனார் ஸ்டாலின் கொடைக்கானல்! மருமகன் சபரீசன் ஸ்பெயின்! கோடையைக் கொண்டாடும் திமுக குடும்பம்!

வேகாத வெயிலில் தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் இடைத் தேர்தலுக்கு உழைத்துக்கொண்டிருக்க, அதற்குள் வெற்றியைக் கொண்டாடும் ஜாலி மூடுக்கு ஸ்டாலின் குடும்பம் வந்துவிட்டது.


கொடைக்கானலில் மனைவி துர்கா சகிதம் போட்டிங், பில்லியர்ட்ஸ் என்று தூள் கிளப்பிவருகிறார் ஸ்டாலின். அதேபோன்று, அவரது மருமகன் சபரீசன் ஸ்பெயின் நாட்டில் குடும்பத்துடன் ஜாலி டூர் போயிருக்கிறார். 

இவர்கள் எல்லாம் ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்க, உதயநிதி மட்டும் சும்மா இருப்பாரா என்ன? அவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போயிருக்கிறார். தேர்தல் முடிவு வந்தபிறகு, முழுதாக மக்களுக்கு உழைக்கத்தான் நேரம் சரியாக இருக்கும் என்று நம்புகிறார்களாம். அதனால் இப்போதே ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறார்கள்.

சீக்கிரம் எல்லோரும் திரும்பி வாங்கப்பா, உங்க எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி சுட்டுரப் போறாரு...