ஸ்டாலினுக்கு சம்மந்தியான மதுசூதனன்! கோபாலபுரம் வீட்டில் நிச்சயதார்த்தம்!

அது ஒரு காலம். தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் எதிரே பார்த்தால்கூட சிரிக்க மாட்டார்கள்.


திருமண வீடுகளுக்கு ஒரே நேரத்தில் போக மாட்டார்கள். அதாவது, அந்த அளவுக்கு கீரியும் பாம்பும் போல முறுக்கிக்கொண்டு திரிவார்கள். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக்கொள்ளாத குறைதான். எடப்பாடி மாபெரும் பேச்சாளர் என்று துரைமுருகன் பாராட்ட, அதற்கு நன்றி தெரிவித்து வழிகிறார் முதல்வர்.

இந்த விவகாரங்களுக்கு எல்லாம் சிகரம் வைப்பது போன்று இன்று ஸ்டாலினும், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனும் நெருங்கிய சொந்தக்காரர்களாக மாறிவிட்டனர். ஆம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் சென்னையில் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கருணாநிதி மறைந்து ஓராண்டுகள் ஆகிறது. இதனால் கருணாநிதி குடும்பத்தில் விசேச நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக அவைத்தலைவரான மதுசூதனின் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

ம்.. எல்லாம் நேரம்தான்.