பெரியாரை பற்றி ரஜினி சிந்தித்துப் பேசட்டும்..! ஸ்டாலின் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம்

ஒரு வழியாக தி.மு.க. தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் முடிவடைந்துவிட்டது. ஏன், எதற்காக இந்த செயற்குழு கூட்டம் என்பதை தெரிவிக்கும் வகையில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.


அனைவரும் ரஜினி குறித்து என்ன சொல்லப்போகிறார் என்பதை அறியவே ஆர்வமாக இருந்தார்கள். அது குறித்துப் பேசிய ஸ்டாலின், ‘ரஜினி இப்போதும் நடிகர்தான். 95 ஆண்டு காலம் தமிழக மக்களுக்காக உழைத்த பெரியாரைப் பற்றி ரஜினி, சிந்தித்து யோசித்து பேச வேண்டும் என்று ஆலோசனை கொடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற விவகாரங்களில் அடுத்த கட்ட போராட்டத்திற்காக வரும் 24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மக்களிடம் கருத்துக் கேட்க அவசியம் இல்லை என்று அமைச்சர் கருப்பணன் ஒருபுறம் தெரிவிக்க, கண் துடைப்பு போன்று பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் முதல்வர் பழனிசாமி. இந்த அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் இலங்கை குடியுரிமை உள்ளிட்ட 6 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது தி.மு.க. 

ஆக, ஸ்டாலின் அடுத்தகட்ட போராட்டத்துக்கு ரெடி.