ஆமாம் என் உடலில் அந்த பிரச்சனை இருந்தது..! ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட ஷாக் தகவல்!

நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதற்கு ஒரு பிரேக் விட்டிருந்தார்.


இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன் என் உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் என்னை கவனித்துக்கொள்ள எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. எனக்கு சற்று அமைதியம் அன்பும் தேவை பட்டது. இதுவே நான் எடுத்த பிரேக்கிற்கு காரணம். 

மேலும் சிலர் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன். ஸ்ருதிஹாசன் முன்பு போல இல்லாமல் குண்டாக மாறிவிட்டார் என்றெல்லாம் பேசி வருகின்றனர். சமூக வலை தளங்களில் இது போல பேசுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அனால் தற்போது இது போன்று பேசுபவர்களையும், என்னை பற்றி வரும் வதந்திகளையும் நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை/

தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முன்னதாக உடல் நிலை காரணமாகவே தான் நடிக்கவில்லை என்று ஸ்ருதி வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் தன் உடலில் பிரச்சனை இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.