நேற்று மாணவி! இன்று மாணவன்! SRM பல்கலைக் கழகத்தில் மர்ம மரணங்கள்!

சென்னை அருகே எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 10 ஆவது மாடியிலி இருந்து குதித்து அணுப்பிரியா தற்கொலை செய்து 24 மணி நேரத்திற்க்குள்ளாக மற்றொரு மாணவர் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் செளத்ரி, ஈ.சி.ஈ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

விடுதியில் தங்கி படித்து வந்த அனுஷ் இன்று காலை, 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே அனுஷ்  உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.

இந்த நிலையில்  நேற்று பொன்னேரியை சேர்ந்த பிடெக் - மாணவி அனுப்பிரியா, கல்லூரியின் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், மாணவி தற்கொலை செய்து கொண்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதில் ஏதேனும் மர்மம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது..

மாணவர்கள் இதுபோல் தொடர்ந்து விபரீத முடிவுகளை எடுக்க  விடுதியில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய காரணம் உள்ளதா, என்ற கோணத்திலும் மறைமலைநகர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்