கொரோனாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மருந்து ரெடி..! கைது செய்யப்படுவாரா ஜீயர்?

கொரோனா காலத்தில், இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல்வேறு உலக நாடுகள் திண்டாடிவருகின்றன. இதற்கு தடுப்பு மருந்து கண்டறிய குறைந்தது ஓர் ஆண்டுக்கு மேல் ஆகலாம் என்ற நிலை இருக்கிறது.


இந்த நிலையில், பாபா ராம்தேவ் போன்ற நகைச்சுவையாளர்கள்தான் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் எதையாவது சொல்லிவருகின்றனர். அவரைப் போலவே இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் ஓர் அற்புதமான மருந்தை தமிழக மக்களுக்கு கூறியுள்ளார்.

இன்று அவர் பிரதமருக்கும் முதல்வருக்கும் விடுத்திருக்கும் செய்தி இது. தமிழக அரசு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும். 

ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டும். மேலும் 108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை கொரோனா தானாக ஓடிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை இவர் கொரோனா வார்டுக்குப் போய், அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து, குணமடைய வைத்தால் நாடு சுபிட்சமாகிவிடும். கொரோனாவும் ஓடிவிடும். செய்வாரா ஜீயர்? இப்படி வதந்தி பரப்பியதால் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டது போன்று ஜீயரும் கைது செய்யப்படுவாரா என்பதுதான் மக்கள் கேள்வி.