நடைபிணமாக வாழும் என் தாய்! புகைப்படத்தை வெளியிட்டு அதிர வைத்த ஸ்ரீரெட்டி!

இன்றய தினம் உலகம் எங்கும் "அன்னையர் தினம்" வெகு சிறப்பாக கொண்டாடபட்டது.


நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீர்ர்கள் என பலரும் அவர்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு இட்டு தங்களது அன்னையின் மீது அன்பை வெளிப்படுத்தினர். 

இந்த  அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஸ்ரீரெட்டி சமூக வளைத்ததில் தன்னுடைய அம்மாவிற்கு நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

 நடிகை ஸ்ரீரெட்டி சமீப காலமாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சில மாதங்களுக்கு முன்பு தெருக்களில் நின்று, போராட்டம் செய்து சர்ச்சையில் சிக்கினார்   இந்நிலையில் இவர் இப்போது வெளியீட்ட செய்தி மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

"உங்கள் அம்மாவை தவிர வேறு யாரு உங்களை அக்கறையோடு பார்த்து கொள்வார்? ஐ லவ் யூ அம்மா... நீங்களும் என்னை லவ் பண்றீங்க தானே?  நான் பிறந்ததை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.  உங்களை தவிர வேற யாராலும் என்னை போன்றவர்களை பார்த்துக்கொள்ள முடியாது. நான் உங்களை மிகவும் வேதனை படுத்தியுள்ளேன்.

என்னால் நீங்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகிறீர்கள். நீங்கள் நடை பிணமாக வாழ்கிறீர்கள், இதற்கு காரணம் நான் தான், இருந்தும் எனக்காக தினமும் கடவுளிடம் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறீர்கள். ஆனால் நான் எந்த தவறும் செய்யாமலேயே பல பிரெச்சனைகளை சந்தித்து வருகிறேன். பலரும் என்னை தான் குறை கூறுகிறார்கள். 

இதற்காக நான் என்ன செய்வது, நீங்களே கூறுங்கள் ? இது நீங்கள் கொடுத்த உயிர், என்னுடைய மூச்சை நீங்களே நிறுத்தி விடுங்கள். நீங்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா" என்று மிகவும் உருக்கமாக அவரது அன்னையர் தின செய்தி இருந்தது.