எனக்கு வருசத்துக்கு ஒரு ஆண் தேவை! ஒருத்தன்லாம் பத்தாது! நடிகையின் விபரீத ஆசை!

தன்னுடைய திருமணத்தை குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் நடிகை ஸ்ரீரெட்டி.


நடிகை ஸ்ரீரெட்டி சமீப காலமாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சில மாதங்களுக்கு முன்பு தெருக்களில் நின்று, போராட்டம் செய்து பெரும்  சர்ச்சையில் சிக்கினார்.   இந்நிலையில் இவர் இப்போது வெளியிட்ட செய்தி மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இவருக்கும் சர்ச்சைக்கும்  என்ன தொடர்பு என்று தான் புரியவில்லை. இவர் எந்த விதமான பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டாலும் அது  சர்ச்சையாக மாறிவிடுகிறது என்றே கூற வேண்டும்.

தற்போது இவர்  வெளியிட்ட தன்னுடைய திருமனத்தை பற்றிய  பேஸ்புக் பதிவு மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. "தன்னால் ஒரே ஒரு ஆணுடன் மட்டும் எப்போதும் வாழ முடியாது, புதிய புதிய காதல் என்னக்கு தேவை " என்று பகிரங்கமாக தகவல் வெளியிட்டு உள்ளார்.

"என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் நிரந்தரமாக அன்பு செலுத்த முடியாது. அப்படி நான் ஒருவர் மீது செலுத்தினால் அது ஒரு வருடத்திற்கு  மட்டுமே நிலைத்து இருக்கும், ஏனெனில் ஒரு வருடத்திற்கு மேல் என்னால் எவருடனும் இருக்க முடியாது. புதிய புதிய காதல் என்னக்கு தேவை " என்று அந்த பதிவில் கூறியுள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.

பதிவு வெளியிட்ட சில மணி நேரத்திலேயே சமூக வலைதளத்தில்  வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது.  இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்றே கூற வேண்டும்.

இதற்கு இவருடைய ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். ஒரு சிலர், "திருமணம் என்பது அவ்வளவு பெரிய விளையாட்டா உங்களுக்கு?"  எனவும் , மேலும் சிலர் "ஒரு வருடம் தானே, நான் ரெடி உங்களை திருமணம் செய்து கொள்ள, ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? ? எனவும் கண்டபடி கேள்வி எழுப்பி வருகின்றனர்.