இலங்கையில் இப்படியொரு குண்டுவெடிப்பு நடக்கும் என்று இலங்கை நினைக்கவே இல்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து எழமுடியாத சோகத்தில் இருக்கிறது நாடு. எனென்றால், இலங்கை முழுமையாகவே சுற்றுலாவை நம்பியிருக்கும் தேசம். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இப்போது அத்தனை ஹோட்டல்களும், சுற்றுலா பிரதேசங்களும் காற்றாடுகிறது.
மீண்டும் பிரபாகரன் வர வேண்டும்! ஏங்கும் இலங்கை அரசு!
இப்போதுதான் பிரபாகரன் எப்படிப்பட்ட நேர்மையான போராளியாக இருந்தார் என்பது இலங்கைக்குப் புரியவந்திருக்கிறது. அதனால்தான் ராஜபக்ஷே தொடங்கி சிறிசேனா வரையிலும், பிரபாகரன் இருக்கும் வரையிலும் இப்படியொரு தாக்குதல் நடந்ததே இல்லை என்று பாராட்டியிருக்கிறார்கள். இதுவரை பயங்கரவாதி என்று பேசப்பட்ட பிரபாகரனை இப்போது மாவீரன் என்று புகழ்கிறார்கள்.
தங்கள் பகுதியில் வேறு எந்த தீவிரவாத இயக்கமும் நுழைந்துவிடாத அளவுக்கு எப்படி பாதுகாப்பாக வைத்திருந்தனர் என்பதை அறிந்து இனி இலங்கையைக் காப்பதற்காக முன்னாள் புலிகளின் உதவியைக் கேட்டிருக்கிறது இலங்கை. அதனால், இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
முதல் கட்டமாக இலங்கையில் திடீர் செல்வந்தர்கள் யார் என்று கண்டறிந்து, அவர்களிடம் விசாரணையைத் தொடங்குமாறு அரசுக்கு முன்னாள் புலிகள் ஆலோசனை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த வகையில் உடனடியாக இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.
கூண்டோடு தங்கள் இனத்தை வேரறுத்த இலங்கைக்கு ஆபத்து நேரத்தில் உதவ முன்வந்திருக்கும் புலிப்படையினரைக் கண்டு சிங்களவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.