தமிழகம் என்னை வாழவைக்கும்! பிக்பாஸில் நெகிழ வைத்த ஈழத் தமிழச்சி! யார் இந்த லாஸ்லியா?

பிக்பாஸ் 3வது சீசனின் 2வது போட்டியாளராக இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா உள்ளே சென்றுள்ளார்.


கடந்த இரண்டு பிக்பாஸ் சீசன்களிலும் முழுக்க முழுக்க இந்தியாவை சேர்ந்த போட்டியாளர்கள் தான் இருந்தனர். தற்போது 3வது சீசனில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா போட்டியாளராக நுழைந்துள்ளார். இவர் இலங்கையில் ஊடகத்தில் பணியாற்றி வருகிறார். லாஸ்லியா செய்தியாளராக இருந்தாலும் அவ்வப்போது செய்தியும் வாசிப்பார். ஈழத் தமிழில் செய்தி வாசித்தபடி அறிமுகம் ஆனது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தில் கிளிநொச்சியில் பிறந்த இவர் திரிகோணமலையில் வளர்ந்து கடின முயற்சிக்கு இடையே செய்தி வாசிப்பாளராக மாறியுள்ளார் லாஸ்லியா. 

எதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வந்திருக்கிறீர்கள் என்று கமல் கேட்டார். அதற்கு சிறிதும் தாமதிக்காமல் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என்று கூறி அனைவரையும் உருக வைத்துள்ளார் லாஸ்லியா.