சவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி! அடம்பிடிக்கும் அதிபர் மகள்! இலங்கை பரபரப்பு!

இலங்கையில் இறுதிப்போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் அந்நாட்டின் ராணுவத் தளபதியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன


மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா – இலங்கை ராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும் இவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டவர்.

இவரை இலங்கையின் அடுத்த ராணுவ தளபதியாக பதவியில் அமர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மகள் சத்துரிக்கா சிறிசேனா முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஓய்வு பெற உள்ளதால் உடனடியாக அந்நாட்டுக்கு புதிய ராணுவ தளபதி நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டால் ஐ.நா. அமைதிப் படைக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புகளும் அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புகளும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன