சீனாவின் பிடியில் இலங்கை! ராஜபக்சேவை எதிர்த்து என்ன செய்யப்போகிறார் மோடி?

இலங்கை தேர்தலில் கோத்தபய ராஜபக்சே ஜெயிப்பார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை.


இப்போது, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராகிவிட்டார். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே ஆபத்து. ஏனென்றால், இதுவரை இந்தியாவின் கைக்குள் இருந்த இலங்கை இனி சீனாவின் கைக்குப் போய்விடும் என்பதுதான். 

இனரீதியாக இலங்கை பிளவு பட்டிருக்கிறது. இந்துக்களான தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், இந்தியவம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் இவர்கள் கோத்தபயவை நிராகரித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பெரும்பான்மைச் சமுதாயமாக சிங்களவர்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.

சிறுபான்மையினர் சமூகத்தின் ஆதரவைப் பெற பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக் கொள்ள அதிபரும், அவர் சகோதரரும் விரும்பமாட்டார்கள். அதனால் இப்போது உடனடியாக தமிழர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றே நம்புவோம்.

ஆனால், சீனாவுடனான உறவு ராஜபக்ச சகோதரருக்கு புதியதல்ல. இனி அந்த உறவு மிகவும் உறுதியாகிவிடும். ஏற்கனவே சீன வலையில் நேபாளம், இப்போது இலங்கை,நாளை மாலத்தீவு. இதற்கு இந்தியா மட்டுமின்றி இலங்கை சிறுபான்மை மக்களும் கவலைப்பட்டே ஆக வேண்டும்.

இப்போது சீனாவும் நம் கையில் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அருணாசல பிரதேசத்தில் ஏகப்பட்ட நிலத்தை சீனா அபகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ஒரு நாடையே நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது சீனா.

மோடி வேடிக்கைதான் பார்ப்பாரா..?