ஆஸ்திரேலியாவில் இருந்து குழந்தைகளுடன் விரட்டப்பட்ட தமிழ் தம்பதி! நடுவானில் நிகழ்ந்த அதிசயம்! நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!

இலங்கையைச் சேர்ந்தவர்களை அகதிகள் இல்லை என்று கூறி வலுக்கட்டாயமாக விமானத்தில் ஆஸ்திரேலிய அரசு ஏற்றிச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் என்பவர் அவரது மனைவி பிரியா மற்றும் மகள்களுடன் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் அகதி அல்ல என்று கூறி அவரை ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்ற அரசு முயற்சித்து வந்தது. இதற்கு நாட்டில் வசித்து வந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டம் என நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து அவரை வெளியேற்றலாம் என்ற தீர்ப்பு வெளியானது. பின் அவர்கள் அவசர அவசரமாக வலுக்கட்டாயமாக மெல்போர்ன் நகர விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்த ஏற்றிச் செல்லப்பட்டனர்.

இதனை அறிந்த போராட்டக்காரர்கள் மெல்போர்ன் விரைந்து அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைய நீதிமன்றம் மீண்டும் வழக்கை விசாரித்து தீர்ப்பை ரத்து செய்தது. ஆனால் தீர்ப்பு வரும் முன்பே விமானம் பறந்து சென்றதால் அவர்களுக்கு தகவல் போய் சேரவில்லை. பின் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுதே விமானிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து டார்வின் அடுத்த பகுதியில் விமானம் திருப்பப்பட்டது.

பின் அவர்கள் தரையிறக்கபட்ட பின் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் குறித்து கேட்ட போது விமானத்தில் செல்லும்போது தனது மகள்கள் கதறி அழுததாகவும் அப்போது அவர்கள் அருகில் கூட என்னை விடவில்லை என்றும் நடேசலிங்கத்தின் மனைவி பிரியா மனமுருக தெரிவித்துள்ளார். டார்வின்கும் மெல்போர்னுக்கும் இடையே மூவாயிரம் கிலோ மீட்டர் தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.