தமிழர்களை குறிவைத்தே இலங்கை குண்டுவெடிப்பு! சற்று முன் வெளியான திடுக் தகவல்!

தமிழர்கள் வழிபடும் நேரத்தில் குறி வைத்து இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இலங்கை தொடர் குண்டுவெடிப்பு, தமிழகத்தில் சாதி மோதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குண்டு வெடிப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 

இந்திய உளவு பிரிவு இலங்கை அரசை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காதது வன்மையாக கண்டிக்க தக்கது.  இதனை சர்வதேச சமூக கண்டுக்காமல் உள்ளது ஏற்புடையது அல்ல.  மேலும் விடுதலை புலிகள் சர்வதேச அரசியல் பொறுப்பாளர் மறைந்த பாலசிங்கம் கூறியது போல் இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்போடு தொடர்பில் உள்ளனர் என ஏற்கனவே எச்சரித்து இருந்தார்.

இலங்கை தேவாலயங்களில் நான்கு மொழிகளில் வழிபாடு நடைபெருகிறது சரியாக தமிழில் வழிபாடு நடைபெறும்போது மட்டுமே குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது பொன்னமராவதி சாதிய மோதலுக்கு காரணமான ஆடியோ சாதிய மோதலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பேசப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். வாக்கு பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெளிவற்றாதாக உள்ளது எனும் புகாரை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

அது விசாரிக்கப்பட்டு எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றார். கிறிஸ்தவர்களை குறி வைத்தே குண்டு வெடிப்பு என்று கூறப்பட்ட நிலையில் தமிழர்களை குறி வைத்து என்று சீமான் கூறியிருப்பது திடுக் தகவலாக உள்ளது.