பெருஞ்சோகம்! இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளையும் இழந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்!

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள கொச்சிகடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் தினமான நேற்று முன் தினம் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.


அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் குண்டு வெடித்தது. இதையடுத்து நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஒரு தேவாலயம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது விடுமுறையை கழிக்க டென்மார்க்கில் இருந்து வந்த கோடீஸ்வரரின் மூன்று குழந்தைகள் அந்தக் குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர்

டென்மார்க்கில் மிகப்பெரிய பணக்காரரான ஆன்டர்ஸ் ஹால்ச் போவில்சன்  இலங்கை குண்டுவெடிப்பில் தனது 3 குழந்தைகளை பறிகொடுத்துள்ளார்.ஸ்காட்லாந்தின் மிகப்பிரபலமான வீரோ மோடா மற்றும் ஜாக் அண்டு ஜோன்ஸ் பிராண்டுகளின் உரிமையாளர் போவில்சனுக்கு 4 குழந்தைகள் இருந்தனர்.

இதில் 3 குழந்தைகள் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து சுற்றி பார்த்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இந்த 3பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த செய்தியைக் கேட்டதும் அத்தம்பதிகள் உடனே அதிர்ந்து இலங்கைக்கு புறப்பட்டு வந்துள்ளனர். தங்களின் மூன்று குழந்தைகள் இந்த குண்டுவெடிப்பில் இருந்தது தங்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அத்தம்பதிகள் கூறியுள்ளனர்.