தல அஜித்துடன் இணையும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

அமிதாப்பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகளான ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியில் வெளியான பிங்க் இந்தி திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன், டாப்சி பன்னு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மிகப்பெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தை தமிழில் தயாரிக்க போனி கபூர் திட்டமிட்டுள்ளார்

 

அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச்.வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

 

படத்துக்கான நட்சத்திரத் தேர்வு முடிவடைந்த பின் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை மறைந்த தனது மனைவி ஸ்ரீதேவிக்கு அர்ப்பணிப்பதாக போனிகபூர் தெரிவித்துள்ளார்.

 

பிங்க் திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஏற்கனவே வித்யாபாலன் இந்த படத்தில் நடிக்க உள்ள நிலையில் ஸ்ரீதேவியின் மகளுக்கும் இந்த படத்தில் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீதேவியின் மகள் இந்திப்படத்தில் தான் அறிமுகம் ஆனார். இந்த நிலையில் அஜித்படத்தில் அறிமுகம் ஆவதன் மூலம் ஒரே படத்தில் பிரபலம் ஆகிவிடலாம் என்பதால் ஜான்வியை இந்த படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.