வாந்தி வாந்தியாக எடுத்து தள்ளும் ஸ்ரீரெட்டி! காரணம் யார் என்பதையும் வெளியிட்டு பரபரப்பு!

தமிழில் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "NGK". இந்த திரைப்படம் தற்போது வெளியாகி திரை அரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


இந்த திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கான விமர்சங்களை பலரும் வெளியீட்டு உள்ளனர். ஒரு சிலர் இந்த திரைபடம் சூப்பராக இருக்கிறது என்கின்றனர், மற்றும் சிலர் சுமாராக இருக்கிறது என்கின்றனர். கலப்படமான விமர்சனங்களையே இந்த திரைப்படமானது சந்தித்து வருகிறது என்றே கூறலாம். 

பலரும் இந்த திரைப்படத்திற்கான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட விமர்சனம் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த ஸ்ரீரெட்டி, "நடிகை ரகுல் ப்ரீத் சிங் வேஸ்ட், அவரது நடிப்பு வாந்தி வருகிறது, சாய் பல்லவி ராக்ஸ், லவ் யூ ரவுடி பேபி" என்று கூறியுள்ளார். 

நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட கருத்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இவருக்கு எப்போதுமே யாராவது ஒருவரை சமூகவலைத்தளத்தில் குற்றம் சாடுவதையே பணியாக கொண்டவர்.  இதற்கு முன் நடிகர் ராகவா லாரன்ஸ், சுந்தர்.c , நடிகர் நாணி இன்னுமும் பலரை குற்றம் சாடியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. 

சில நாட்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் வந்த ஸ்ரீரெட்டி, தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை மோசமாக கமெண்ட் செய்து உள்ள இச்சம்பவம்  என்ன பிரெச்சனையை உருவாக்க போகிறதோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.