பொதுவாக திராவிட கட்சிக்காரர்கள்தான் பெண்கள் மீது கை வைப்பதாக பல்வேறு புகார்கள் வந்துசேரும். பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருக்கும் ஆட்கள் மீதான புகார்கள் அத்தனை சீக்கிரம் வெளியே வராது.
பெண் ஆபாச விவகாரத்தில் சிக்கிய ஸ்ரீ என்ற ஸ்ரீகண்டன். இன்னும் விசாரணைதானா? கைது செய்யுங்கப்பா!

இப்போது இந்து மகாசபாவின் தலைவர் மீதான புகார் இப்போது வெளியே வந்திருக்கிறது. அவர் மீது புகார் கொடுத்தவர் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் என்பதுதான் மிகப்பெரிய ட்விஸ்ட். ஆனால், அதனை போலீஸ் மறைக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் அனைத்திந்திய இந்து மகாசபாவின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்சியின் அனைத்திந்திய தலைவராக பதவி வகித்து வருபவர் ஸ்ரீகண்டன் எனப்படும் ஸ்ரீ. உருப்படாத விஷயங்களுக்கு எல்லாம் பெரிய போஸ்டர் அடித்து, தன்னுடைய படத்தை பெரிதாக போட்டுக்கொள்பவர்.
கடந்த 2016-ம் ஆண்டு திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பெண்மணி நிரஞ்சனி என்பவர், அனைத்திந்திய இந்து மகாசபாவில் மகளிர் பிரிவில் மாநில செயலாளராக கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கூறி வந்துள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், நிரஞ்சனி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகண்டன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் கொடுத்திருக்கும் புகாரில், ‘‘கட்சியின் தலைவராக உள்ள ஸ்ரீகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் கட்சி சார்பாக டெல்லி செல்வதாகவும், அவருக்கு மொழி பிரச்சனை உள்ளதால் தன்னுடன் வருமாறு அழைத்தார். இதனை நம்பி சென்றதாகவும் நாளடைவில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், கல்யாணம் செய்ய விரும்புவதாக கூறி தன்னை வற்புறுத்தினார்.
இதனால் வேலையை ராஜினாமா செய்தேன். ஆனாலும், என்னைப் பற்றி இழிவான கருத்துகளை ஸ்ரீகண்டன் பரப்பி வருகிறார். மறுபடியும் வேலையில் சேரவில்லை என்றால் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கிறார்’’ என்று புகார் அளித்துள்ளார்.
அவரை புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கைது செய்து விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும் என்கிறார்கள். ஆனால், போலீஸ் அமைதி காக்கிறதே, என்னதான் காரணமோ?