பாம்பை கையில் பிடித்து அணில் செய்த தரமான சம்பவம்! வைரல் புகைப்படம்!

பாம்பு ஒன்றை அணில் கடித்து திண்ணும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


அணில்கள் பொதுவாக அமைதியான செல்லப்பிராணி ஆகவே பார்க்கப்படுகின்றன. மிகவும் சாதுவாக இருக்கும் அணில்கள் பழங்கள் மற்றும் அதன் கொட்டைகளை விரும்பி உண்பவை. ஆனால் நாம் பார்க்கப் போகும் அணிலோ அனைவரையும் பயமுறுத்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். பொதுவாக பாம்புக்கும் அணிலுக்கும் சண்டை நடந்தால் அதில் எது ஜெயிக்கும் என்பதை நம்மால் எளிதில் யூகித்துவிட முடியும்.

ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அணில் ஒன்று பாம்பை பிடித்து கொன்று சென்றுள்ள வியப்பான மற்றும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. பாம்பு ஒன்றை கையில் பிடித்தபடி அந்த அணில் முறைத்துப் பார்க்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாம்பின் தலை எலும்பு உள்ளிட்ட அனைத்தையும் இரண்டு அங்குலம் வரை அந்த அணில் மென்று தின்று விட்டதாக தேசிய பூங்கா புகைப்படக்கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படமானது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அவர்களால் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள பலர், பாம்புகளை விட அணில்களை பார்த்தால் தான் தற்போது அதிகம் பயம் வருதாக குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலரோ இந்த புகைப்படம் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு அப்போது வைரலானதாகவும் தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.