ஸ்மார்ட் ஃபோனை இப்படி யூஸ் செய்தால் மனிதர்களுக்கு கொம்பு முளைக்கும்! பிபிசி ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

லண்டன்: ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவோருக்கு, கழுத்துப் பகுதியில் கொம்பு முளைப்பதாக, புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஆம். இந்த தகவல் உங்களை அதிர்ச்சியடைய செய்யலாம். ஆனால், இது உண்மைதான். இதுபற்றி பிபிசி ஊடகம், நவீன வாழ்க்கை எப்படி மனிதர்களின் எலும்புக்கூட்டை பாதிக்கிறது என்ற தலைப்பில் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. இதேபோல, வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோனை குனிந்தபடி உற்று பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் போன்றவற்றில் பணிபுரிய நேரிடுவதாலும், நமது கழுத்துப் பகுதி தொய்வடைய நேரிடுகிறது. இதற்காக, தண்டுவடம் மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்து ஒரு புதிய எலும்பை உருவாக்கும் பணியை மண்டையோடு மேற்கொள்கிறது என்றும்,  இதனை சமீபத்தில் நடத்திய எக்ஸ்ரே பரிசோதனையில் உறுதி செய்ததாகவும் சாஹர் என்ற மருத்துவ ஆய்வாளர் கூறியுள்ளாராம். 

இதுபற்றிய எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளையும் அவர் வெளியிட்டதாகக் கூறி, இந்த ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன. இதில், கழுத்துப் பகுதியின் அருகே, தண்டுவடத்தில் இருந்து புதிய எலும்பு உருவாவதை காணலாம். இது உலகம் முழுக்க உள்ள ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களை அதிர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், தி நியூயார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், இந்த செய்தியில் உண்மையில்லை, இதனை நம்பாதீர்கள் என, கேட்டுக் கொண்டுள்ளன.