செம்மொழித் தமிழ் பேசி தெறிக்கவிடும் ஸ்பைடர் மேன்! தமிழர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

ஸ்பைடர் மேன் ஃபேர் ஃப்ரம் ஹோம் தமிழ் டப்பிங் விரைவில் வெளியாகவவிருக்கும் நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.


ஸ்பைடர் மேன் ஃபேர் ஃப்ரம் ஹோம் படத்தில் டாம் ஹாலண்ட், ஸெந்தயா, ஜேக் கில்லன்ஹால், சாமுவேல் எல் ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆவெஞ்சர் எண்ட் கேம் படத்தின் நேரடி தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவரவுள்ளது. ஜூலை  5-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. 

ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தை இயக்கிய ஜான் வாட்சன் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். மைக்கேல் கியாச்சினோ இசையமைத்துள்ளார். மார்வெல் ஸ்டுடியோஸ், கொலம்பியா பிக்சர்ஸ், பாஸ்கல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் படத்தை தயாரிக்கின்றன. 

காமிக் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் மிகவும் வரவேற்பு பெற்றுள்ள ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மூன்றாவது நடிகர் டாம் ஹாலண்ட் ஆவார். இதற்கு முன் 2002-ஆம் ஆண்டில் வெளியான படத்தில் டாபே மாக்யூரும், 2012-ஆம் ஆண்டில் வெளியான படத்தில் ஆண்ட்ரு கார்ஃபீல்டும் ஸ்பைடர் மேனாக நடித்துள்ளனர்.