நேர்கொண்ட பார்வை சிறப்பு காட்சி! வெளியானது முதல் விமர்சனம்! படம் எப்படி இருக்கு?

நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த பிரபலங்கள் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


வரும் 8ந் தேதி உலகம் முழுவதும் அஜித்தின் நேர் கொண்ட பார்வை திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தியில் வெளியான பிங்க் படத்தில் ரீமேக்காக தமிழில் நேர்கொண்ட பார்வை உருவாகியுள்ளது.

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் அஜித் நடித்துள்ளார். ஸ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். இந்த நிலையில் மும்பையில் நேர்கொண்ட பார்வை படத்தின் சிறப்பு காட்சி போட்டுக் காண்பிக்கப்பட்டது.

திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்தனர். படம் குறித்து வெளியே எதுவும் பேச வேண்டாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கேட்டுக் கொண்டார்.

ஆனாலும் கூட பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதன்படி நேர்கொண்ட பார்வை சிறப்பான படம் என்று அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் படம் தொடர்பான முதல் விமர்சனம் பாசிட்டிவாக வந்துள்ளது. இது தல ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.