சைவம் சாப்பிடுபவர்களுக்கு ஸ்பெஷல் கோழி ரெடி! கே.எப்.சி. கொக்கரக்கோ!

அசைவம் சாப்பிட நினைத்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் சைவ பிரியர்களுக்கென கோழிக் கறியை போன்றே சைவத்தில் உணவு தயாரித்து சாதனை படைத்துள்ளது கே.எப்.சி. நிறுவனம்.


உலகெங்கும் உள்ள அசைவ உணவு பிரியர்களை மாமிச உணவுக்கு பல வகையான பெயர்களை வைத்து கவர்ந்து இழுப்பதில் கே.எப்.சி. எப்போதும் முதலிடம் வகித்து வருகிறது. 

கோழிக்கறியின் மாறுபட்ட சுவை மற்றும் வித்தியாசமான வடிவங்களுக்காக கேஎப்சி உணவகத்திற்கு அலுவல் ரீதியான பார்டி, நண்பர்களுடனான பார்டி என உடன் பணிபவர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட நினைப்பவர்கள் செல்வது வழக்கம்.

கே.எப்.சி. உணவில் புழுக்கள் இருப்பதாகவும், கரப்பான் பூச்சி இருப்பதாகவும் அவ்வப்போது வாட்ஸ் ஆப்பில் பல செய்திகள் உலாவ விட்டாலும் அதை எல்லாம் நம்பமால் நாள்தோறும் கே.எப்.சி.யை முற்றுகையிடும் வாடிக்கையாளர்கள் சிக்கனை ருசிக்காமல் செல்வதில்லை. 

ஏற்கனவே அசைவ பிரியர்களை கவர்ந்திழுக்கும் கே.எப்.சி. நிறுவனமானது அமெரிக்காவில் சைவம் மட்டும் சாப்பிடும் நபர்களையும் தன் பக்கம் இழுக்க ஒரு புது முயற்சியை கையாண்டுள்ளது. சிக்கன் உணவு சாப்பிட்டால் என்ன ருசி கிடைக்குமோ அதே ருசியை காய்கறிகளை கொண்டு தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கி உள்ளது கே.எப்.சி. 

இந்த சைவ உணவு கோழிக்கறியைபோல சுவையாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த உணவை சைவ பிரியர்களுக்காக உலகம் முழுவதும் கொண்டு வர கே.எப்.சி. நிறவனம் திட்டமிட்டுள்ளது.

அது சரி கோழிக்கறியில் மட்டும் என்ன ருசி உள்ளது. அதை சுற்றியுள்ள மசாலாவைத் தானே நாம் ருசித்து சாப்பிடுகிறோம். கோழிக்கென தனியாக ருசி உள்ளதா என கேட்பவர்களுக்கு இனி கோழிக்கறி என்று சொல்லி காய்கறிகளால் செய்யப்பட்ட உணவை தந்து விடலாம். எல்லாம் ஒரே ருசிதானே?