கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சரிதானாம்! உச்ச நீதிமன்றம் சொன்னதால் பன்னீர் ஜாலி!

பன்னீருக்கு நல்ல நேரம் இறக்கை கட்டி பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


ஜாலியாக அமெரிக்காவுக்குப் போய் விருதுக்கு மேல் விருதுகளாக வாங்கிக்குவிக்கும் வேளையில், அவருக்கு சந்தோஷம் தரும் வகையில் ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. 

கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூலை மாதம் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி அவர்கள் அனைவரையும் சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார்.

மேலும், நடப்பு சட்டப்பேரவை காலம் முடியும் 2023 வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.இதனை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். 

இந்த வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘‘17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவை நாங்கள் ஆதரிக்கிறோம், அதேநேரம், அவர்கள் உடனே தேர்தலில் போட்டியிட முடியும்’’ என்று தெரிவித்தனர்.

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சில மாதங்களிலேயே விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்கிவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு எதிரான 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கை இன்னும் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளவே இல்லை. 

அப்படியே எடுத்துக்கொண்டாலும், அதில் பன்னீருக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும் என்பதைத்தான் இன்றைய தீர்ப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆகவே, பன்னீர் செம ஹேப்பி. ஸ்டாலின் வழக்கம்போல் காத்திருக்க வேண்டியதுதான்.