எஸ்.பி.வேலுமணி வந்தாச்சு.. ஆ.ராசாவுக்கு என்னாச்சு…? கொந்தளிக்கும் நீலகிரி மாவட்டம்.

கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் தொகுதி மக்களுக்கு நிறையவே நலத்திட்ட உதவிகள் செய்த நேரத்தில், ஆ.ராசா மட்டும் டெல்லியிலேயே தங்கிவிட்டார். அதனால், யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை.


இந்த நேரத்தில் சமீபத்தில் பெய்த பெருமழை நீலகிரி மாவட்டத்தை பெரிதும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. இதுவரை இயற்கை சீற்றமான மழையில் ஏற்பட்ட விபத்துக்களில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். வெள்ள நீர், மண்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுந்து விபத்து போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. குறிப்பாக, உதகை – கூடலூர் சாலை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு நிவாரண உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தொகுதியின் எம்.பி.யான ஆ.ராசா இதுவரை எட்டிப் பார்க்காமலே இருக்கிறார்.

கொட்டும் மழையிலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நீலகிரி மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளையும் வழங்கியிருக்கிறார். ஆனால், சொந்த தொகுதி மக்கள் வேதனைப்படுவதை இதுவரை கண்டுகொள்ளாமல் ஆ.ராசா இருப்பது மக்களை கொதிக்க வைத்துள்ளது.

ஆ.ராசாவின் செயல் தி.மு.க.காரர்களையே கொதிக்க வைத்திருக்கிறது என்பதால், அடுத்து நேரில் வந்தால் மக்களிடம் வாங்கிக்கட்டப் போவது நிச்சயம்.