தென்கொரியாவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் பதக்கத்தை வென்ற தமிழகத்தை சேர்ந்த தந்தை-மகன்
உலக ஆணழகன் போட்டி! பதக்கங்களை தட்டித் தூக்கிய தந்தை - மகன்! கொரியாவில் சாதித்த தாம்பரம் தமிழர்கள்!
தென்கொரியாவில் நடைபெற்ற வந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட உலக ஆணழகன் போட்டியில் பதக்கத்தை வென்றனர் சென்னையில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை-மகன். உலக ஆணழகன் போட்டியில் தந்தை, மகன் கலந்து கொண்டு பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
சுமார் 37 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற உலக ஆணழகன் போட்டி தென்கொரியா நாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்று தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியை வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் பங்கேற்று உள்ளனர். உலக ஆண்ழகன் போட்டியில் மகன் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வீரர் பெஞ்சமினும் . இவரது தந்தை ராஜேந்திரன் சீனியர் பிரிவில் பங்கேற்றார்.
உலக ஆணழகன் போட்டி இறுதியில், தமிழக வீரர் பெஞ்சமின் ஜெரால்டு 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். மேலும் இவரது தந்தை சீனியர் பிரிவில் 3-வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார் ராஜேந்திரன் மணி.
பதகத்தை வென்று தயாகம் திரும்பிய தந்தை மற்றும் மகன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், உலக ஆணழகன் போட்டியில் தந்தை, மகன் கலந்து கொண்டு பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்றும், இளம் தலைமுறையினர் இந்த மாதரி போட்டிக்கு அதிக அளவில் வருவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் தமிழகப் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் உடல்கட்டுக்கோப்புடன் இருக்கும் வகையில் அது தொடர்பான வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்கள். ஆணழகன் போட்டியில் ஏராளமான பட்டங்களை வென்றுள்ள ராஜேந்திரன் மணி உடற்பயிற்சி கூடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.