கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெட்ரோல் விலை உயரும்! சவுதி பட்டத்து இளவரசர் போடும் குண்டு!

ஈரான் மீது உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரலாறு காணாத அளவிற்கு எண்ணெய் விலை உயரும் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இரு வாரங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிணறுகளில் ஈரான் நாட்டின் தூண்டுதலின் பெயரில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. 

இதனால் லட்சக்கணக்கான கச்சாஎண்ணெய் பீப்பாய்கள் எரிந்து நாசமாகின. மேலும் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆதலால், தற்போது 12 சதவீதம் வரை கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. 

இந்நிலையில் ஈரான் மீது உலக நாடுகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். ராணுவம் மூலம் அல்லாமல் அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் தீர்வு கண்டு நடவடிக்கை எடுப்பது சிறப்பாக இருக்கும். இல்லையேல் வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டு உலக நாடுகள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை காண நேரிடும் என பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாள் கடத்தாமல் விரைவில் இதனை செய்து முடிக்கும்படி அவர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.