எங்க மகள்னு நினைச்சி சடலத்தை அடக்கம் செய்தோம்! ஆனால் எங்கள் மகள் உயிரோடு இருக்கிறாள்! 6 வருடத்துக்கு பிறகு பெற்றோரின் பகீர் தகவல்!

சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த மகள் உயிரோடு இருப்பது தெரிந்ததால் அவரை மீட்டுத்தரவேண்டும் என பெற்றோர் கேரிரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக இருக்கும் 23 பேரையும் மீட்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தஞ்சையில் யாகப்பா, பவுலின் மார்த்தாள் தம்பதியின் மகள் இம்மாகுலேட் கம்ப்யூட்டர் படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக 2012ம் ஆண்டு அய்யம்பேட்டையில் டிராவல்ஸ் நடத்தி வரும் புஹாரி என்பவர் மூலமாக சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார்.

2013ம் வருடம் பெற்றோருக்கு போன் செய்த இமாகுலேட், கம்ப்யூட்டர் தொடர்பான வேலை தரமால் வீட்டு வேலை தந்துவிட்டதாகவும், மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும் எப்படியாவது சொந்த ஊருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் அழுதகொண்டே கூறியுள்ளார். ஆனால் இது குறித்து டிராவல்ஸ் ஏஜெண்ட் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 2013ம் ஆண்டு மே மாதம் இமாகுலேட் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடலை கொண்டு வர பெரிய போராட்டமே நடத்த வேண்டி இருந்தது. ஒரு வருடத்திற்கு பின்னர் உடல் கொண்டு வரப்பட்டு சொந்த ஊரான தஞ்சையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கள் மகள் உயிரோடு இருப்பதாகவும் அவரையும், அவருடன் கொத்தடிமைகளாக பணிபுரியும் 23 பேரையும் மீட்க வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

இதற்கு காரணம் கடந்த ஜனவரி மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த 23 பெண்கள் சவுதியில் கொத்தடிமைகளாக உள்ளனர் என வீடியோவுடன் செய்தி வந்துள்ளது. அந்த வீடியோவில் இமாகுலேட் நின்றிருந்த காட்சிகள் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் மகள் உயிரோடு இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஆனாலும் மகளை மீட்டுக் கொடுக்குமாறு மனு அளித்து பத்து மாதங்கள் ஆகியும் எந்தே முன்னேற்றமும் இல்லை என கூறும் பெற்றோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இமாகுலேட் மட்டுமல்ல 23 பேரையும் மீட்டுத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தள்ளனர்.