பாகிஸ்தானின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரை வென்ற தென்னாபிரிக்கா!

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது T20 போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென்னாபிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


டாஸ் வென்று பவுலிங்கை தென்னாபிரிக்கா அணி தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது.

தென்னாபிரிக்காவின் ஹென்றிக்ஸ் 4 விக்கெட்களை சாய்த்தார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது.

தென்னாபிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் மட்டும் ஆட்டமிழக்காமல் 55 ரன்களை எடுத்தார். பாகிஸ்தானின் முகமது அமீர் 3 விக்கெட்களை சாய்த்தார்.

 இதனால் பாகிஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாபிரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து 11 T20 தொடர்களை வென்ற பாகிஸ்தான் அணியின் சாதனைக்கு தென்னாபிரிக்கா அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.