ஜெயிக்கவேண்டிய ஆட்டத்தை சொதப்பி தோற்ற பாகிஸ்தான்!

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றியை பெற்றது.


பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை பாகிஸ்தான் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்கள் மந்தமாக ஆடினாலும் பின்னர் களமிறங்கிய வான் டெர் டுசென் அதிரடியாக ஆடினார். இவர் 27 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் பாகிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இவர் 29 பந்துகளில் 65 ரன்களை அடித்தார். இதனால் தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்களை எடுத்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை தந்தனர். பாகர் ஜமான் 14 ரன்களில் வெளியேற பின்னர் களமிறங்கிய தலட், பாபர் பாசமுடன் இனைந்து தென்னாபிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொண்டு அடித்து ஆடினர்.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 147 ரன்களை எடுத்திருந்தது. அனால் சற்றும் எதிர்பாராத நிலையில் கடைசி நான்கு ஓவர்களில் தென்னாபிரிக்கா பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். சிறப்பாக ஆடி கொண்டிருந்த பாபர் அசாம் 90 ரன்களுக்கும், தலட் 55 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் அடுத்தடுத்து அவுட் ஆகி சென்றனர். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தானை வென்றது. அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.