ரஜினியின் 2வது மகளின் 2வது கல்யாணத்தில் புதிய திருப்பம்!

ரஜினியின் 2வது மகளின் 2வது திருமணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கு கடந்த 2010ம் ஆண்டு தொழில் அதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மூலம் சவுந்தர்யாவுக்கு வேத் என்கிற மகன் இருக்கிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் அஸ்வினிடம் இருந்து சவுந்தர்யா விவாகரத்து பெற்றார்.

   விவாகரத்தை தொடர்ந்து தந்தை ரஜினி வீட்டிலேயே மகனுடன் சவுந்தர்யா வசித்து வந்தார். இந்த நிலையில் பிரபல தொழில் அதிபரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளவருமான விசாகனுடன் சவுந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலானது. காதலுக்கு ரஜினியும் பச்சைக் கொடி காட்டினார். இதனை தொடர்ந்து கடந்த வருடம் ரஜினி வீட்டில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது.

   ஆனால்  மகள் திருமணத்தை நடத்தும் விவகாரத்தில் தான் ரஜினி குழப்பமாக இருந்தார். ஏனென்றால் மணமகன் வீட்டில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த விரும்புகின்றனர். ஆனால் ரஜினியோ மகளுக்கு 2வது திருமணம் என்பதால் எளிமையாக வீட்டிலோ அல்லது திருப்பதியிலோ திருமணத்தை வைத்துக் கொள்ள நினைக்கிறார்.

   இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 11ந் தேதி சவுந்தர்யா – விஷாகன் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஏழு நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இல்லை என்றால் திருப்பதியில் திருமணத்தை முடித்துவிட்டு லீலா பேலசில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

   இந்த நிலையில் சவுந்தர்யா – விஷாகன் வயது தொடர்பான தகவலால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விஷாகன் சவுந்தர்யாவை விட 6 வயது குறைவானவர் என்று கூறப்படுகிறது. அதாவது தனது மூத்த சகோதர் ஐஸ்வர்யாவை போலவே வயதில் சிறியவரை சவுந்தர்யா திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

   ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தன்னை விட வயதில் குறைவான தனுசை திருமணம் செய்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.