தமிழிசை பதவி விரைவில் பறிப்பு! தமிழக பாஜக தலைவர் ஆகும் காங்கிரஸ்காரர்!

நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவுக்குப் போன அத்தனை தமிழக கட்சித் தலைவர்களும் சென்னை திரும்பிய பின்னரும், ஜி.கே.வாசன் மட்டும் டெல்லியில் ஞாயிறு வரையிலும் தங்கியிருக்கிறார். பி.ஜே.பி தலைமையில் இருந்து அவரை தங்கச் சொன்னார்களாம்.


தமிழகத்தில் பி.ஜே.பி. கேவலமான தோல்வி அடைந்திருக்கும் நிலையில், கட்சியில் இல்லாத புது நபரை தலைவரைப் போட்டால்தான் வளர்ச்சி அடையும் என்று டெல்லி மேலிடம் ஆசைப்படுகிறது. ஏற்கெனவே வாசன் இதுகுறித்து பேசியிருந்தாலும், இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் மூன்று முக்கியமான பி.ஜே.பி பிரமுகர்களை ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசியிருக்கிறார். இனிமேல் தனிக் கட்சி என்று நின்று அவமானப்பட முடியாது என்பது அவரது நிலை. அதேபோல் பி.ஜே.பி.க்கும் யாரேனும் ஒரு மாற்று தலைவர் தேவைப்படுகிறது. 

சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகிய மூவரும் இப்போது போட்டியில் இருக்கிறார்கள் என்றாலும், யாரைப் போட்டாலும் கோஷ்டி கானம்தான் ஒலிக்கும். அதனால் சரியான தருணத்தில் ஜி.கே.வாசனை தலைவராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய மாபெரும் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸை கலைத்து, பி.ஜே.பி.யில் சேர்த்துவிட்டால், அதற்கு தனி பலம் என்றும் அதற்காக ஒரு எம்.பி. சீட்டும் கேட்டிருக்கிறாராம். அந்தக் கோரிக்கையையும் பி.ஜே.பி. பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறது. ஆக, தமிழிசையின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

அடப் பார்றா…