காங்கிரஸ் கட்சி ப.சிதம்பரத்தை கைகழுவியாகத்தான் பரவலாக பேசப்பட்டது. ஏனென்றால் ராகுல் காந்தி ட்வீட் போட்ட அளவில் வேறு எந்தத் தலைவர்களும் ப.சிதம்பரம் கைது குறித்து வெளிபப்டையாகப் பேசவில்லை.
சிதம்பரத்தை சோனியா பார்த்தாச்சு! ராகுல் ஏன் போகவில்லை?
தமிழக காங்கிரஸ் கட்சியும் ஒருசில போராட்டம் தவிர வேறு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இந்த நிலையில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை இன்று சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் கூடவே இருந்தார். இன்றைய நிலையில் ப.சிதம்பரம் மீது நரேந்திர மோடி கடுமையான கோபத்தில் இருக்கிறார். அதனால் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை நடத்தினால், அது சிதம்பரத்துக்கு ஆபத்தாகவே முடியும் என்று சொல்லப்பட்டதாம்.
அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்குப் பிறகு சிதம்பரத்தை சிறையில் வைத்திருக்க முடியாது. அதனால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
சோனியா, மன்மோகன் ஆகியோர் சந்தித்துப் பேசினாலும் ராகுல் காந்தி ஏன் வரவில்லை என்று கேட்டிருக்கிறார் சிதம்பரம். விரைவில் வந்து சந்திப்பதாக சோனியா சமாதானம் சொன்னாலும் ராகுல் செல்வது சந்தேகம் என்கிறார்கள்.
ஏனென்றால், கார்த்தி சிதம்பரத்துக்கு எம்.பி. சீட் வேண்டும் என்று சண்டை போட்டு சிதம்பரம் வாங்கியதை ராகுல் இன்னமும் மறக்கவே இல்லையாம்.