சோனியா எழுப்பிய கேள்விகள், பதில் சொல்லாமல் நழுவும் மோடி! டெல்லி கலவரம் திக்திக்

இன்று காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார் சோனியா காந்தி. டெல்லி கலவரம் குறித்து ஐந்து முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.


அதுவரை, டெல்லி கலவரம் குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் அமைதியாக இருந்த மோடி, இப்போதுதான் வாய் திறந்துள்ளார். இன்று பேசிய சோனியாகாந்தி, ”டெல்லியில் திட்டமிடப்பட்ட வன்முறைகள் நடந்துள்ளது. வெறுப்பு அரசியலை பாஜக தலைவர்கள் பேசிவருவதே கலவரங்களுக்கு காரணம். கலவரம் நடந்த பகுதிகளுக்குக் கூட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் செல்லவில்லை. இக்கலவரங்களின் பின்னால் திட்டமிட்ட சதி உள்ளது. இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்”’’ என்று கோரிக்கை வைத்தார். 

டெல்லியைக் காப்பாற்ற துணை ராணுவப்படையினர் உடனடியாக களமிறக்கப்பட வேண்டும். அதன் பின் தேவைப்பட்டால் ராணுவம் களமிறக்கப்படவேண்டும். டெல்லி கலவரம் பற்றி பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் மௌனம் அதிர்ச்சி அளிக்கிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிர்வாகப் பணிகளில் ஈடுபட வேண்டும். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்க்க வேண்டும்’’ என்றும் கூறிய சோனியா காந்தி

இதையடுத்து, “டெல்லி மக்களிடம் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறது. வெறுப்பு அரசியலை புறக்கணியுங்கள். காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு நல்லிணக்கத்தை நிலைநாட்ட அழைப்பு விடுக்கிறேன்’’ என்று ஆக்கபூர்வமான கட்டளையும் இட்டார். 

சோனியா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்த விஷயம் தெரியவந்ததும் அவசரம் அவசரமாக ட்வீட் செய்தார் பிரதமர் மோடி. “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. காவல் துறையினரும், இதர அமைப்புகளும் அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதிப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

மேலும், ”அமைதியும் நல்லிணக்கமும் நமது நெறிமுறைகளுக்கு மையமானவை ஆகும். எல்லா நேரங்களிலும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு எனது சகோதரிகள் சகோதரர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அமைதியாக இருப்பது மிக முக்கியம். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னமும் டிரம்ப் கனவில்தான் இருக்கிறாரோ மோடி..?