மோடிக்கு சோனியா திடீர் அறிவுரை..! சொன்னால் கேட்பாரா நம் பிரதமர்..? சுப்ரமணிய சுவாமி சொல்றதையாவது கேளுங்க.

உலகம் முழுவதும் கொரோனா பெரும் ஆபத்தாக உருமாறிவருகிறது. எனவே உடனே நமது எல்லைகளை மூடுங்கள் என்று அபாய அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 12ம் தேதி தெரிவித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் சொன்னதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.


அதேபோன்று இப்போது நாட்டு மக்களிடம் பாரதப்பிரதமர் கொரோனா தடுப்புக்காக நன்கொடை வசூலிக்கிறார். எம்.பி.க்களின் சம்பளத்தை குறைக்கிறார் தொகுதி மேம்பாட்டு நிதியில் கை வைக்கிறார். இதையெல்லாம் விட ஒரு விஷயத்தை உடனே செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் சோனியா காந்தி.

ஆம், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜ.க.வின் ஆதரவாளராக சுப்பிரமணியம் சுவாமியும் இந்த நேரத்தில் 2,000 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டவேண்டிய அவசியம் இல்லை, அதனை உடனே தள்ளிவையுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார் இதையெல்லாம் கேட்பாரா மோடி?