என் தங்கை அப்படித்தான் குட்டையாக டிரஸ் போடுவார்! ஸ்ரீதேவி மகளுக்கு பிரபல நடிகை சப்போர்ட்!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கத்ரினா கைப், இயக்குனர் அபாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பாரத்" என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்.


இந்த திரைப்படம் வரும் ஜூன் 5, 2019 அன்று திரையில் வெளியாக போகிறது. நடிகை கத்ரினா கைப், பாரத் திரைப்படத்தில் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்து உள்ளார்.  தற்போது இவர் இந்த திரை படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டு உள்ளார்.  சமீபத்தில் இவர் நேஹா தூப்பியா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக பங்கேற்றார். 

அப்போது பேசிய நடிகை கத்ரினாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. "உங்களது ஜிம்மில் கவர்ச்சியுடன் உடை அணிந்து வருபவர்களை பற்றி கூறுங்கள்"  என்று கேள்வி எழுப்பினார் நிகழ்ச்சி தொகுப்பாளர் தூப்பியா. இதற்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்த நடிகை கத்ரினா,  ஜான்வி கபூரின் உடையை பற்றி பேச ஆரம்பித்தார்.  நடிகை ஜான்வி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார். "ஜான்வி ஜிம்மிற்க்கு அணிந்து  வரும் மிகவும் குட்டை குட்டையான டிரௌசர்களை பார்த்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது" என்றார். சில சமயங்களில் இதை பார்க்க பார்க்க எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்றும் கூறினார்.

இச்சம்பவம் ஹிந்தி திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  கத்ரினாவின் இந்த பேச்சிற்கு ஜான்வி கபூர் எந்த விதத்திலும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக அவரது சித்தப்பாவின் மகள் அதாவது சகோதரியான நடிகை சோனம் கபூர், கத்ரினாவிற்கு தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தின் மூலம் சரியான பதிலடி கொடுத்து உள்ளார்.

சோனம் கபூர் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் உள்ள ஸ்டோரி பகுதியில், நடிகை ஜான்வியின் புகைப்படங்களை வெளியிட்டு, அதனுடன் "ஷி ஆல்சோ வெர்ஸ் ரெகுலர் கிளாத்ஸ் அண்ட் ராக்ஸ்" என்று கேப்சனும்  வெளியிட்டும் உள்ளார். அதாவது தனது சகோதரி எந்த உடை வேண்டுமானாலும் அணிவார் உங்களுக்கு என்ன என்கிற ரீதியில் அந்த பதிவு இருந்தது.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு பின்னர் ஜான்விக்கும் அவரது தங்கை குஷிக்கும் ஒரு சிறந்த தோழியாக விளங்குகிறார் இவர். நடிகை சோனம், கடைசியாக "ஏக் லடிக்கி கோ தேகா டோஹ் ஐஸ லாகா" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.