தந்தையின் சடலத்தின் முன் மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்! குரூப் போட்டோ எடுத்து நெகிழ்ச்சி! கல்யாண வீடான துக்க வீடு!

திண்டிவனத்தை அடுத்த சிங்கனூரைச் சேர்ந்த தெய்வமணி,செல்வமணி இணையரின் மகன் அலக்சாண்டர்.


இவர் மயிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அதே பள்ளியில் பணியாற்றும் மயிலத்தை அடுத்த கொணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசுவரி.அலக்சாண்டர் ஜெகதீசுவரி இடையே காதல் மலர்ந்ததது.இதற்கு இருவீட்டாரும் சம்மதிக்க அடுதமாதம் 2ம்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணமும் அன்றுமாலை திண்டிவனத்தில் திருமண வரவேற்பும் நடத்துவதென்று முடிவு செய்தார்கள்.

திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டு இருந்தன. இந்த நிலையில் அலக்ஸ்ண்டரின் தந்தை தெய்வமணி உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று காலை திடீரென மரணமடைந்தார்.குடும்பமே சோகத்தில் மூழ்க,தந்தையின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்பிய அலக்ஸாண்டருக்கு இது மிகவும் வருத்தம் அளித்தது. இதனால் அலக்ஸாண்டர் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.

உறவினர்களை அழைத்து இறந்துபோன தந்தையின் சடலத்தின் முன்னால் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மணமகள் ஜெகதீசுவரியின் வீட்டாருடன் பேச அவர்களும் சம்மதித்தனர்.செங்கனூரில் உள்ள அலக்ஸாண்டரின் வீட்டில் தெயவமணியின் சடலத்தையும் அதனருகில் அவரது மனைவி செல்வியையும்  அமரவைத்து இருவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

தந்தை தெய்வமணியின் கையில் புதுத் தாலியை வைத்தபின் அதை எடுத்து  கதறி அழுதபடியே தன் காதல் மனைவி ஜெகதீசுவரியின் கழுத்தில் கட்டினார்.இதைப்பார்த்த உறவினர்களும் நெகிழ்ந்து கண்கலங்கினர்.