25 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தை! உடலை பதப்படுத்தி வைத்து தற்போது அடக்கம் செய்த மகன்! நெகிழ வைக்கும் காரணம்!

25 ஆண்டுகளுக்கு முன், இறந்த தந்தையை அவரது மகன் தற்போது அடக்கம் செய்துள்ளார்.


இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்தவர் ஸ்டீபன் ஜார்ஜ். பொருளாதார நெருக்கடி காரணமாக, இவர், இத்தாலி சென்று, கடந்த 1994ம் ஆண்டு வேலை செய்து வந்தார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். அதேநேரம், இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றதால், ஸ்டீபனின் உடலை தாய்நாடு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும், இந்த தகவல், ஸ்டீபனின் குடும்பத்தினருக்கு தெரிவிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டதால், அவரது உறவினர்கள், சடலத்தை பதப்படுத்தி வைக்க முடிவு செய்தனர். இதன்பேரில், இத்தாலி அரசின் அனுமதியுடன், 25 ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்படி, ஸ்டீபனின் சடலத்தை பதப்படுத்தி வைத்தனர்.

இதையடுத்து, இலங்கையில், 2009ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால், பொருளாதார சிரமம் காரணமாக, ஸ்டீபனின் குடும்பத்தாரால் சடலத்தை மீட்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின், தற்போது அவரது சடலத்தை மீட்டு, யாழ்ப்பாணம் கொண்டுவந்தனர்.

இதையடுத்து, குடும்பத்தினர், உறவினர்கள் சூழ, இறுதி மரியாதை செய்யப்பட்டு, அவரது உடல் கடந்த 8ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக, அமைந்துள்ளது.