ஏன்டா உனக்கு என் அம்மா கேட்குதா? தாயின் ரகசிய காதலனை வெட்டி கூறு போட்ட மகன்! சென்னை திகுதிகு!

சென்னை கொளத்தூரில் கள்ளக் காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னையில் ஆட்டோ ஓட்டிவரும் அன்சர்பா பாஷா என்பவர் கொளத்தூரை அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர். இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் உறவு குறித்து லட்சுமியின் மகன் அஜித் என்பவருக்கு தெரியவந்ததை அடுத்த தாயுடனாக பழக்கத்தை கைவிடுமாறு ஆட்டோ ஓட்டுநரை பலமுறை எச்சரித்துள்ளார்.

ஆனால் அவர் பேச்சை இருவருமே கேட்கவில்லை. இருவரும் தங்கள் முறையற்ற உறவை தொடர்ந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநரை தீர்த்துக்கட்ட லட்சுமியின் மகன் அஜித் முடிவு செய்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் தனிமையில் கிடைக்கவேண்டும் என காத்திருந்தார் அஜித். நேற்று நேற்று இரவு அன்சர் பாஷா தனது தாயுடன் ரெட்டேரி சிக்னல் அருகே பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு லட்சுமியும் இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த அஜித் மற்றும் அவரது கூட்டாளிகள் அன்சர் பாஷாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார் பாஷா. ஆனால் ஓட முடியாமல் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அன்சர் பாஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜமங்கலம் போலிசார் தகவல் அறிந்து வந்து ஆட்டோ ஓட்டுர் அன்சர் பாஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அன்சர் பாஷாவை கொன்றுவிட்டு தப்பி ஓடிய அஜித் மற்றும் அவரது கூட்டாளிகளை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.